/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விதிமுறைகளை மீறி செயல்படும் கிரஷர்களால் கிராம மக்கள் அவதி விதிமுறைகளை மீறி செயல்படும் கிரஷர்களால் கிராம மக்கள் அவதி
விதிமுறைகளை மீறி செயல்படும் கிரஷர்களால் கிராம மக்கள் அவதி
விதிமுறைகளை மீறி செயல்படும் கிரஷர்களால் கிராம மக்கள் அவதி
விதிமுறைகளை மீறி செயல்படும் கிரஷர்களால் கிராம மக்கள் அவதி
ADDED : ஜூன் 23, 2025 05:30 AM
அரூர்: அரூர் சுற்றுவட்டாரத்தில், விதிமுறைகளை மீறி செயல்படும் கிர-ஷர்களால், அவதிக்கு உள்ளாகி வருவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஜல்லி, எம்.சாண்ட் தயாரிக்க, 5க்கும் மேற்பட்ட கிரஷர்கள் செயல்படு-கின்றன. இங்கு ஜல்லி உடைக்க பயன்படுத்தும் குவாரிகளில் இருந்து, அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி, பல ஆண்டுகளாக கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. மேலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இரவு, பகல் முழுவதும் இயங்கும் கிரஷர்களிலிருந்து எம்.சாண்ட், ஜல்லி என, ஏராளமான டிப்பர் லாரிகளில் ஏற்றி செல்வதால், சுற்று வட்-டார கிராமங்களுக்கு செல்லும் தார்ச்சாலை சேதமாகி குண்டும் குழியுமாக, மண் சாலையாக மாறி புழுதி பறக்கிறது. அப்போது, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படு-கின்றனர். இதனால், அச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து, பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறியதாவது:
கிரஷரில் இருந்து வெளியேறும் கற்துகள்கள் காற்றில் பறந்து, சுற்-றியுள்ள விளைநிலங்களிலுள்ள பயிர்கள் மீது படிந்து விவசாயம் பாதிக்கிறது. மேலும், குவாரிகளில் வைக்கப்படும் வெடி பொருட்களால், காற்று மாசுபடுவதுடன், அருகேயுள்ள வீடு சுவர்-களில், விரிசல்கள் ஏற்பட்டு சேதமாகி, கிராம மக்களின் உயி-ருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், விதிமுறைகளை மீறி செயல்படும், தனியார் கிரஷர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்-வாறு, அவர்கள் கூறினர்.