/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வீரபத்திரசாமி, பெரியசாமி கோவில் விழா; தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திவீரபத்திரசாமி, பெரியசாமி கோவில் விழா; தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி
வீரபத்திரசாமி, பெரியசாமி கோவில் விழா; தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி
வீரபத்திரசாமி, பெரியசாமி கோவில் விழா; தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி
வீரபத்திரசாமி, பெரியசாமி கோவில் விழா; தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி
ADDED : மே 31, 2025 06:50 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மூக்காரெட்டிப்பட்டியில், குருமன்ஸ் பழங்குடியின மக்களின் குலதெய்வமான வீரபத்திரசாமி, பெரியசாமி கோவில் திருவிழா கடந்த, 22ல், கொடியேற்றுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து சிங்கார தோப்பு முனியப்பன் கோவிலுக்கு கிடா வெட்டுதல், முத்திரை எடுத்தல், பந்தக்கால் நடுதல், கங்கணம் கட்டுதல், வெவ்வேறு கிராமங்கள் சார்பில் பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று வீரபத்திர சாமியை சக்தி அழைத்து, தலைமீது தேங்காய் உடைத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.பின்னர், பெரியசாமி சக்தி அழைத்து சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து முடிஎடுத்தல் நிகழ்ச்சி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. மூக்காரெட்டிப்பட்டி, அப்.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, மோளையானுார், கே.மோரூர், கே.என்.புதுார், சிக்கம்பட்டி, ரேகடஹள்ளி, பையர்நத்தம், கல்லாவி, பனமரத்துப்பட்டி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.