/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ரசாயன உரங்களின் பயன்பாடு குறைப்பதற்கான பயிற்சி ரசாயன உரங்களின் பயன்பாடு குறைப்பதற்கான பயிற்சி
ரசாயன உரங்களின் பயன்பாடு குறைப்பதற்கான பயிற்சி
ரசாயன உரங்களின் பயன்பாடு குறைப்பதற்கான பயிற்சி
ரசாயன உரங்களின் பயன்பாடு குறைப்பதற்கான பயிற்சி
ADDED : ஜூன் 20, 2024 06:18 AM
தர்மபுரி: நல்லம்பள்ளி தாலுகா, வேளாண் துறை- அட்மா திட்டத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல் என்ற தலைப்பில், நல்லம்பள்ளி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் நேற்று பயிற்சி நடந்தது.
இதில், வேளாண் துணை இயக்குனர் அருள்வடிவு தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்து, பண்ணையம் மற்றும் அங்கக வேளாண்மை முறைகள் பற்றி எடுத்துக் கூறினார். பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தை சேர்ந்த வெண்ணிலா ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். வேளாண் உதவி இயக்குனர் சரோஜா மாநில, மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் பங்கு பெறும் வழிமுறைகள் குறித்து கூறினார். மேலும், உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். வேளாண் அலுவலர் முனிரத்தினம், உயிர் உரங்களின் பயன்பாட்டு முறைகள் குறித்து கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சிவசங்கரி, உதவி தொழல்நுட்ப மேலாளர் கபிலன் ஆகியோர் பயிற்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.