/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/முதல்வர் ஸ்டாலின் வருகையால் தர்மபுரியில் போக்குவரத்து மாற்றம்முதல்வர் ஸ்டாலின் வருகையால் தர்மபுரியில் போக்குவரத்து மாற்றம்
முதல்வர் ஸ்டாலின் வருகையால் தர்மபுரியில் போக்குவரத்து மாற்றம்
முதல்வர் ஸ்டாலின் வருகையால் தர்மபுரியில் போக்குவரத்து மாற்றம்
முதல்வர் ஸ்டாலின் வருகையால் தர்மபுரியில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜூலை 11, 2024 12:04 AM
தர்மபுரி: தர்மபுரிக்கு, முதல்வர் ஸ்டாலின் வருகையால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க போக்குவரத்தில் மாற்றம் செய்-யப்பட்டுள்ளது.
இது குறித்து, தர்மபுரி எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் தெரிவித்துள்-ளதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், 'மக்களுடன் முதல்வர்' திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைக்க, நல்-லம்பள்ளி அடுத்த பாளையம்புதுார் பஞ்.,ல் உள்ள அரசு மேல்நி-லைப்பள்ளி வளாகத்தில் நடக்கும் விழாவிற்கு இன்று வருகை தருகிறார். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க காலை, 8:30 மணி முதல் மதியம், 1:30 மணி வரை போக்-குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி முதல், சேலம் -தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள், ஓசூர், கிருஷ்ணகிரியிலி-ருந்து சேலம் செல்லும் வாகனங்கள் அகரம் சந்திப்பு, காரிமங்-கலம், திப்பம்பட்டி, மொரப்பூர், அரூர், அயோத்தியாப்பட்டணம் வழியாக, சேலம் மாவட்டத்திற்கும், அதேபோல், சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரு செல்லும் கனரக வாகனங்கள் அயோத்தியாப்பட்டணம், அரூர், மொரப்பூர், திப்பம்பட்டி, காரி-மங்கலம் வழியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் செல்லலாம்.
தர்மபுரியிலிருந்து சேலம் செல்லும் இலகுரக வாகனங்கள் நல்லம்-பள்ளி, முத்தம்பட்டி, பொம்மிடி, தீவட்டிப்பட்டி வழியாக, சேலம் மாவட்டத்திற்கும் மாற்றி விடப்பட உள்ளது. சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு செல்லும் இலகுரக வாகனங்கள் மேச்சேரி, பெரும்பாலை, பென்னாகரம் வழியாக, தர்மபுரி மாவட்டத்திற்கு செல்லுமாறு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்-படி மார்க்கத்தில் பயணிக்கவுள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மேற்படி சாலை மாற்றத்தை அறிந்து, இடையூறு இல்லா பயணம் மேற்கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.