Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூர் - சேலம் நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு தள்ளிவைப்பு

அரூர் - சேலம் நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு தள்ளிவைப்பு

அரூர் - சேலம் நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு தள்ளிவைப்பு

அரூர் - சேலம் நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு தள்ளிவைப்பு

ADDED : ஜூலை 02, 2025 02:12 AM


Google News
பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி முதல் - சேலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை முதல், தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி வரை, 320 கோடி ரூபாய் மதிப்பில், 4 வழி சாலை போடப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதில் எச்.புதுப்பட்டியில் டோல்கேட் அமைக்கப்பட்டு நேற்று முதல் செயல்பாட்டுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு கட்டண விபரங்களையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் டோல்கேட் திறக்கப்படவில்லை. இது குறித்து, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய, சேலம் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

அரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எச்.புதுப்பட்டி பகுதியில் டோல்கேட் நேற்று திறப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஏ.பள்ளிப்பட்டி- மஞ்சுவாடி சாலை பணிகளில் சிறு சிறு பணிகள் நடந்து வருகிறது.

மேலும், டில்லியில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்துள்ளனர். அவர்கள் டோல்கேட்டில் இயந்திரங்கள் இயக்கத்தை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் முடிவடைந்தவுடன், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் விரைவில், டோல்கேட் செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு, அவர்கள் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us