/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சமையல் கூடத்தில் இயங்கும் பள்ளி பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்சமையல் கூடத்தில் இயங்கும் பள்ளி பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
சமையல் கூடத்தில் இயங்கும் பள்ளி பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
சமையல் கூடத்தில் இயங்கும் பள்ளி பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
சமையல் கூடத்தில் இயங்கும் பள்ளி பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
ADDED : ஜூன் 19, 2024 10:42 AM
கடத்துார்: தர்மபுரி மாவட்டம், கடத்துார் பேரூராட்சி வீர கவுண்டனுாரில் அரசு தொடக்கப்பள்ளி, 1984 முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 16 மாணவர்கள் படிக்கின்றனர். 2 ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளி கட்டடம் சேதமானதால் கடந்த சில மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் படிக்க கட்டட வசதி இல்லாமல் போனது. இதையடுத்து அதே இடத்தில் புதிய கட்டடம் கட்ட அரசு திட்டமிட்டது. ஆனால் அதிகாரிகள் அவ்விடத்தில் போதிய இடவசதி இல்லாததால், அதே பகுதியில், அரசுக்கு சொந்தமான வேறொரு இடத்தில் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்தனர்.
அங்கு கட்டடம் கட்ட பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 35 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இங்கு கட்டடம் கட்ட, பேரூராட்சி நிர்வாகம், ஒப்புதல் தர மறுத்து காலம் தாழ்த்துவதால் கடந்த, 6 மாதத்திற்கு மேலாக கட்டடம் கட்டுவது கேள்விக்குறியாக உள்ளது.
தற்போது மாணவர்களுக்கு இடவசதி இல்லாமல் சமையல் கூடத்தில் மாணவர்கள் அமர்ந்து படித்து வருகின்றனர். பேரூராட்சியின் அலட்சியத்தால் இப்பள்ளியில் சேர்க்கை குறைந்து உள்ளது. கட்டட வசதி இல்லாததால், பெரும்பாலான பெற்றோர்கள், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க மறுக்கின்றனர். விரைந்து புதிய பள்ளி கட்டடம் கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.