/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை
மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை
மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை
மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை
ADDED : ஜூன் 13, 2025 01:21 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், நரசிங்கபுரம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 22. கடந்த, 2017, மே 26ல், அப்பகுதியை சேர்ந்த விவசாயி ராஜா, 52, என்பவரது விவசாய நிலம் அருகே சென்றபோது காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி பலியானார். மறுநாள் காலை தன் நிலத்திற்கு சென்ற ராஜா, கண்ணனின் சடலத்தை மறைக்க, அருகில் இருந்த கால்வாயில் வீசியுள்ளார்.
இது குறித்த புகாரில் மதிக்கோண்பாளையம் போலீசார் ராஜாவை கைது செய்தனர். தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி திருமகள், தன் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட ராஜாவுக்கு, 5 ஆண்டு சிறை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.