ADDED : செப் 09, 2025 02:33 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் குடிமை பணிகள் தேர்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் 18 வரையும், 22 முதல், 27 வரையில் காலை மற்றும் மதியம் என, 2 வேளை நடக்க உள்ளது.
மாவட்டத்தில், 5 தேர்வு கூடங்களில், 2,353 தேர்வர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர். தேர்வர்களுக்கு தேர்வு கூடங்களில் அடிப்படை வசதிகள், தடையில்லாத மின்சாரம் வழங்கவும், சிறப்பு பஸ் வசதிகளும் ஏற்படு செய்யப்பட்டுள்ளது.
தேர்வர்களின் அனுமதி சீட்டில் உள்ளவாறு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு கூடங்களுக்கு சரியான நேரத்திற்குள், தேர்வு கூடங்களுக்குள் வர வேண்டும் என்றும், தாமதமாக வருபவர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்தார்.