ADDED : செப் 10, 2025 01:34 AM
பாலக்கோடு, பாலக்கோடு அருகே உள்ள எர்ரனஹள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சரவணன் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார்.
அதை கொண்டாடும் வகையில் பள்ளி சார்பில் பாராட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு, சக ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் அவருக்கு, 4 கிராம் தங்க மோதிரம் பரிசளித்து, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.