Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மரத்தை அகற்றாமல் தார்ச்சாலை; பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

மரத்தை அகற்றாமல் தார்ச்சாலை; பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

மரத்தை அகற்றாமல் தார்ச்சாலை; பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

மரத்தை அகற்றாமல் தார்ச்சாலை; பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

ADDED : ஜூலை 25, 2024 01:40 AM


Google News
மொரப்பூர்: மொரப்பூர் அருகே, சாலை விரிவாக்க பணியின் போது, மரத்தை அகற்றாமல் அதை சுற்றி தார்ச்சாலை அமைப்பது, பொது மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் இருந்து, அ.பள்ளிப்பட்டிக்கு செல்லும் சாலையை, சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 30க்கும் மேற்-பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வாகனங்கள் அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கணக்கில் கொண்டு மொரப்பூரில் இருந்து சிந்தல்பாடி ரயில்வே மேம்-பாலம் வரை, 2 கட்டங்களாக சாலை அகலப்படுத்தும் பணி நடக்-கிறது. சாலை விரிவாக்கப்பணி ஆமை வேகத்தில் நடந்து வரும் நிலையில், அப்பியம்பட்டி பிரிவு சாலை அருகே சாலையில் நடுவே உள்ள புளியமரத்தை அகற்றாமல் அதனை சுற்றி ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு சாலை சமப்படுத்தப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்-படுத்தி உள்ளது. இது, சாலைப்பணிகள் நடக்கும் இடங்களை, அதிகாரிகள் எட்டிக்-கூட பார்ப்பதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us