Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய மாணவன் மீட்பு

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய மாணவன் மீட்பு

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய மாணவன் மீட்பு

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய மாணவன் மீட்பு

ADDED : அக் 24, 2025 12:49 AM


Google News
அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த டி.அம்மாபேட்டையை சேர்ந்த விவசாயி ரவிக்குமார் மகன் ரித்திக், 15; அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன். நேற்று பகல், 12:00 மணிக்கு விவசாய தோட்டத்துக்கு சென்ற ரித்திக், தென்பெண்ணையாற்றில் குளிக்க இறங்கினார். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றில் இறங்கிய ரித்திக் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக ஆற்றின் நடுவே உள்ள பாறையில் சிக்கி, 'காப்பாற்றுங்கள்' என

கூச்சலிட்டார்.

அப்பகுதியை சேர்ந்த சிலர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் தோல்வியில் முடிந்தது. அரூர் தீயணைப்புத்துறை வீரர்கள், கயிறு மற்றும் மிதவைகள் மூலம், 6 மணி நேரம் போராடி, மாலை, 6:00 மணிக்கு ரித்திக்கை மீட்டனர்.

உபகரணம் இல்லை

வெள்ளத்தில் சிக்கிய மாணவன் ரித்திக்கை மீட்க, போதிய உபகரணங்கள் இல்லாமல் தீயணைப்புத்துறையினர் தடுமாறினர். வரும் காலங்களில் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்கும் வகையில் நவீன உபகரணங்களை தீயணைப்பு துறையினருக்கு வழங்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us