/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஏரி மீன்களுக்கு இறைச்சி கழிவை கொட்டினால் கடும் நடவடிக்கை ஏரி மீன்களுக்கு இறைச்சி கழிவை கொட்டினால் கடும் நடவடிக்கை
ஏரி மீன்களுக்கு இறைச்சி கழிவை கொட்டினால் கடும் நடவடிக்கை
ஏரி மீன்களுக்கு இறைச்சி கழிவை கொட்டினால் கடும் நடவடிக்கை
ஏரி மீன்களுக்கு இறைச்சி கழிவை கொட்டினால் கடும் நடவடிக்கை
ADDED : ஜூன் 25, 2025 01:47 AM
தர்மபுரி, ர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஹள்ளி, பெரியாம்பட்டி, ஜிட்டாண்டஹள்ளி, மகேந்திரமங்கலம், வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நடப்பு பருவத்தில் செந்துாரா, பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, பங்கனபள்ளி உட்பட, 12 வகையான மா வகைகள் விளைந்து, அறுவடைக்கு தயாராக உள்ளன. விளைச்சல் அதிகரித்த நிலையில், உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் மாங்காய்களை அறுவடை செய்யவில்லை. மேலும், மாங்காய்களை கிலோ, 3 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து, வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், மா விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில், தர்மபுரி அருகே, அன்னசாகரம் ஏரியில், மீன் குத்தகை ஏலம் எடுத்தவர்கள், குறைந்த விலையில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கி, பரிசல் மூலம், ஏரிகளில் மீன்களுக்கு உணவாக வீசி வருகின்றனர்.
இது குறித்து, தர்மபுரி மாவட்ட மீன் வளத்துறை தலைமையிட ஆய்வாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளதாவது: ஏரியிலுள்ள மீன்களுக்கு, நல்ல மாம்பழங்கள் வாங்கி வீசுவது, மீன்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாம்பழத்திலுள்ள சதைகள், மீன்களுக்கு சிறந்த உணவாகும். அதே சமயம் அழுகிய பழங்களை அதிகளவில் கொட்டினால், நீர் மாசுபடுவதோடு, மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும். மீன் குத்தகைதாரர்கள், ஏரி மீன்களுக்கு இறைச்சி
கழிவுகளை கொட்டினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.