Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஒகேனக்கல் தண்ணீர் குடித்த மாணவ, மாணவியருக்கு வயிற்று வலி, வாந்தி

ஒகேனக்கல் தண்ணீர் குடித்த மாணவ, மாணவியருக்கு வயிற்று வலி, வாந்தி

ஒகேனக்கல் தண்ணீர் குடித்த மாணவ, மாணவியருக்கு வயிற்று வலி, வாந்தி

ஒகேனக்கல் தண்ணீர் குடித்த மாணவ, மாணவியருக்கு வயிற்று வலி, வாந்தி

ADDED : ஜூலை 05, 2024 12:13 AM


Google News
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த வகுரப்பம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட கடம்பரஅள்ளியில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் மூலம், பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினி-யோகம் செய்ய, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்-நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம், வகுரப்பம்பட்டி, கடம்பரஹள்ளி, பெரிசாகவுண்டப்பட்டி, பட்டகப்பட்டி உள்-ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடக்-கிறது.

இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர், கம்பைநல்லுார் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்-றனர். அதில், 50 பேர் நேற்று காலை, 10:00 மணிக்கு திடீரென தலைவலி, கண் எரிச்சல், வயிற்று வலி, வாந்தி, கை, கால் வலி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் இருப்பதாக தெரி-வித்துள்ளனர். இதற்கு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலுள்ள ஒகேனக்கல் நீரை குடித்ததால் தான் ஏற்பட்டு இருக்கும் என கூறி-யுள்ளனர்.இதையடுத்து, மொரப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமையில், மருத்துவர்கள் கீர்த்தி, அருண்பிரசாத் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர், மாணவ, மாணவியருக்கு பள்ளி வளா-கத்தில் சிகிச்சை அளித்தனர். காரிமங்கலம் தாசில்தார் ரமேஷ், மொரப்பூர், ஏ.பி.டி.ஓ., ராஜா, மருத்துவக் குழுவினர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலக குழுவினர், கடம்பரஹள்ளி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து, குடிநீரை பரி-சோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

இதனிடையே, கடம்பரஹள்ளியை சேர்ந்த திருப்பதி, 35, என்-பவர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து தனியாக குடிநீர் குழாய் இணைப்பு அமைத்துள்ளார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்துள்-ளனர். ஆத்திரமடைந்த திருப்பதி 'உங்களை எல்லாம், ஏதாவது ஒரு வழி செய்யாமல் விடமாட்டேன்' என கூறியுள்ளார். தொடர்ந்து நேற்று காலை, 6:30 மணிக்கு அவர், மேல்நிலை நீர்த்-தேக்க தொட்டியின் மேல் ஏறியுள்ளார். தொட்டி நீரில் அவர் ஏதேனும் கலந்தாரா என, அவரிடம், கம்பைநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us