Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 10, 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை

10, 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை

10, 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை

10, 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை

ADDED : மே 16, 2025 01:36 AM


Google News
தர்மபுரி, தர்மபுரி, அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள், 2024--25ம் ஆண்டிற்கான, 10 மற்றும் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

இதில், 12ம் வகுப்பு மாணவியர் துாயா, கீர்த்தனா, 492 மதிப்பெண் பெற்று முதலிடமும், சுசீந்தர், ருதுவர்ஷினி, 487 மதிப்பெண் பெற்று, 2ம் இடமும், மஹதி பிரியதர்ஷினி, அனுவர்ஷினி, 485 மதிப்பெண் பெற்று, 3ம் இடமும் பெற்றுள்ளனர். இவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி ஆராதனா, 497 மதிப்பெண் பெற்று மாவட்டம், பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். யாழினி, ஆஷிபா பர்ஹானா, 496 மதிப்பெண் பெற்று, 2ம் இடமும், தன்வி, -494 மதிப்பெண் பெற்று, 3ம் இடமும் பெற்றுள்ளனர். 10 மற்றும் 12ம் வகுப்பில் மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில், செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர் செந்தில்முருகன், துணை முதல்வர் ராஜ்குமார் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஞானகளிதா, தீபா மற்றும் துணை கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஹிலா பானு மற்றும் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us