ADDED : ஜூலை 02, 2025 02:13 AM
பென்னாகரம், ஜூலை 2
தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவுப்படி, பென்னாகரம் - பாப்பாரப்பட்டி சாலையில், ஆலமரத்துப்பட்டி அருகே பாலக்கோடு வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பைக்கில் வந்தவரை நிறுத்தி, வாகனத்தை சோதனை செய்தபோது, பையில் செதுக்கிய, 8.5 கிலோ சந்தன கட்டைகள் இருந்தன.
இதையெடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் அவர், மன்னேரியை சேர்ந்த மதேஷ் என்பது தெரியவந்தது. சந்தன கட்டைகளை மேச்சேரி அருகே உள்ள, பொட்டனேரியிலுள்ள தனியார் பட்டா நிலத்தில் வெட்டி எடுத்து வந்தது தெரியவந்தது. அவருக்கு, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், 1.10 லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்.