/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விதிமுறை மீறிய வாகனங்களுக்கு ரூ.3.25 லட்சம் அபராதம் விதிமுறை மீறிய வாகனங்களுக்கு ரூ.3.25 லட்சம் அபராதம்
விதிமுறை மீறிய வாகனங்களுக்கு ரூ.3.25 லட்சம் அபராதம்
விதிமுறை மீறிய வாகனங்களுக்கு ரூ.3.25 லட்சம் அபராதம்
விதிமுறை மீறிய வாகனங்களுக்கு ரூ.3.25 லட்சம் அபராதம்
ADDED : ஜூன் 14, 2025 06:58 AM
பாலக்கோடு: பாலக்கோட்டில், விதிமுறைகளை மீறி இயக்கிய வாகனங்க-ளுக்கு, 3.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தர்மபுரி ஆர்.டி.ஓ., ஜெயதேவராஜ் உத்தரவின்படி, பாலக்கோடு பிரேக் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் புறவழி பிரிவு சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோ, டிராக்டர், பள்ளி வாகனங்கள் மற்றும் கர்நாடகா பதிவெண் கொண்ட மினி சரக்கு லாரிகள் ஆகி-யவற்றை சோதனை செய்தார். இதில், பல வாகனங்கள் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்டது தெரியவந்தது. சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட, 9 பொக்லைன் உட்பட, 31 வாக-னங்களுக்கு, 3.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தகுதி சான்று, அனுமதி சான்று, சாலைவரி செலுத்தாத பள்ளி வாகனம், டிராக்டர், ஆட்டோ, மினி சரக்கு லாரி என, 6 வாகனங்களை பறிமுதல் செய்தார்.