/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தானிய மண்டியில் ரூ.1.32 லட்சம் திருட்டு தானிய மண்டியில் ரூ.1.32 லட்சம் திருட்டு
தானிய மண்டியில் ரூ.1.32 லட்சம் திருட்டு
தானிய மண்டியில் ரூ.1.32 லட்சம் திருட்டு
தானிய மண்டியில் ரூ.1.32 லட்சம் திருட்டு
ADDED : செப் 23, 2025 01:51 AM
இண்டூர், பென்னாகரம் வாணியர் தெருவை சேர்ந்தவர் ரவி, 56. இவர், தர்மபுரி -பென்னாகரம் சாலையில், இண்டூர் அருகே, சோமனஹள்ளியில் கடந்த, 3 ஆண்டுகளாக தானியமண்டி வைத்து, தொழில் செய்து வருகிறார். கடந்த, 20 அன்று கடையில் பொருட்கள் விற்பனையில் வந்த, 1.32 லட்சம் ரூபாயை கடையிலுள்ள டிராவில் வைத்து விட்டு, கடையை பூட்டி விட்டு சென்றனர்.
மறுநாள் வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டர்கள் உடைக்கப்பட்டு, டிராவில் இருந்த, 1.32 லட்சம் ரூபாய், கடையில் இருந்த, 'சிசிடிவி' கேமரா டி.வி.ஆர்., உள்ளிட்டவையும் திருட்டு போனது தெரியவந்தது. ரவி புகார் படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.