Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சாலை மறியல்

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சாலை மறியல்

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சாலை மறியல்

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சாலை மறியல்

ADDED : ஜூலை 04, 2024 06:04 AM


Google News
அரூர்: அரூர் அடுத்த வேடகட்டமடுவு பஞ்., அருந்ததியர் தெருவில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்-றனர்.

அப்பகுதியை சேர்ந்த ஒருவர், பழைய வீட்டை அகற்றிவிட்டு புதிதாக தார்சு வீடு கட்ட தென்-பெண்ணை ஆற்றுக்கு செல்லும் பொதுவழிப்பா-தையை ஆக்கிரமித்து, பில்லர் அமைத்துள்ளார். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தும் நட-வடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை, 10:00 மணிக்கு, தி.மு.க.,வை சேர்ந்த பஞ்., தலைவர் முத்து தலை-மையில், டி.ஆண்டியூர் -அம்மாபேட்டை சாலையில், வேடகட்டமடுவு பஸ் நிறுத்தத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், வி.ஏ.ஓ., அம்பேத் ஆகியோர் ஒரு வாரகாலத்திற்குள் பொதுவழிப்-பாதையை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறு-தியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட-வர்கள் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us