/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஊர்க்காவல் படைவீரர் விபத்தில் பலி நிவாரணம் கோரி சாலை மறியல் ஊர்க்காவல் படைவீரர் விபத்தில் பலி நிவாரணம் கோரி சாலை மறியல்
ஊர்க்காவல் படைவீரர் விபத்தில் பலி நிவாரணம் கோரி சாலை மறியல்
ஊர்க்காவல் படைவீரர் விபத்தில் பலி நிவாரணம் கோரி சாலை மறியல்
ஊர்க்காவல் படைவீரர் விபத்தில் பலி நிவாரணம் கோரி சாலை மறியல்
ADDED : ஜூன் 03, 2025 01:45 AM
வேலுார், வேலுார் அருகே, ஊர்க்காவல் படைவீரர் விபத்தில் பலியானாதால், நிவாரணம் கோரி உறவினர்கள்
மறியலில் ஈடுபட்டனர்.
வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு போலீஸ் ஸ்டேஷனில், மசிகம் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ், 35, என்பவர் ஊர்க்காவல் படைவீரராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி முடிந்து, 11:00 மணியளவில் ஹோண்டா பைக்கில் வீடு திரும்பினார்.
மசிகம் கிராமம் அருகே, ஆம்பூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்த ஏஜாஸ், 25, என்பவர் ஓட்டி வந்த பல்சர் பைக், அவர் மீது மோதியது. இதில், ராஜேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
பணியிலிருந்து வீடு திரும்பியபோது வாகன விபத்தில் பலியானதால், ஊர்க்காவல் படை வீரர் ராஜேஷ் குடும்பத்திற்கு, நிவாரணம் வழங்கக்கோரி பேரணாம்பட்டு - ஆம்பூர் சாலையில் மசிகம் பகுதியில் நேற்று மாலை, உறவினர்கள் மறியலில்
ஈடுபட்டனர்.
பேரணாம்பட்டு போலீசார், குடியாத்தம் ஆர்.டி.ஓ., சுபலட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, மறியலை கைவிட செய்தனர்.