/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ செங்கல் மேடு மக்களுக்கு குடிநீர் வழங்க கோரிக்கை செங்கல் மேடு மக்களுக்கு குடிநீர் வழங்க கோரிக்கை
செங்கல் மேடு மக்களுக்கு குடிநீர் வழங்க கோரிக்கை
செங்கல் மேடு மக்களுக்கு குடிநீர் வழங்க கோரிக்கை
செங்கல் மேடு மக்களுக்கு குடிநீர் வழங்க கோரிக்கை
ADDED : ஜூன் 05, 2025 01:07 AM
தர்மபுரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தர்மபுரி, பி.டி.ஓ., ஆபீஸில் அளித்த மனுவில்
தெரிவித்திருப்பதாவது:
தர்மபுரி ஒன்றியம், கோணங்கிநாய்க்கனஅள்ளி அடுத்த செங்கல்மேடு கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த ஓராண்டுக்கு முன் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. இத்தொட்டியிலிருந்து குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, 2 வாரம் தொடர்ந்து குடிநீர் வந்தது. பின் ஓராண்டு காலமாக தொடர்ந்து தண்ணீர் வருவதில்லை. கோணங்கிநாய்யனஅள்ளி ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இக்கிராம மக்களின் நலன் கருதி, உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் ஜெயா, ஒன்றிய செயலாளர் மீனாட்சி நகர செயலாளர் நிர்மலா ராணி ஆகியோர் துணை பி.டி.ஓ., பாரதியிடம் மனு கொடுத்தனர்.