ADDED : ஜூலை 10, 2024 06:47 AM
தர்மபுரி: பாலக்கோடு அடுத்த வெள்ளிசந்தை - மாரண்டஹள்ளி சாலையில், கொலசனஹள்ளி மேம்பாலம் அருகே, நேற்று அதிகாலை தர்மபுரி குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை எஸ்.ஐ., கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் வாகன தனிக்கை நடத்தினர்.
அப்போது, அவ்வழியாக வந்த பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளரான கடகத்துார் அடுத்த, கே.என்.சவூளுரை சேர்ந்த சின்னசாமி, 36, என்பவரை விசாரணை செய்தனர். அதில், ரேஷன் அரிசியை கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் பகுதியில் அதிக விலைக்கு விற்க கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து சின்னசாமியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.