/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வீட்டுமனை பட்டா கோரி மனு அளிக்கும் போராட்டம் வீட்டுமனை பட்டா கோரி மனு அளிக்கும் போராட்டம்
வீட்டுமனை பட்டா கோரி மனு அளிக்கும் போராட்டம்
வீட்டுமனை பட்டா கோரி மனு அளிக்கும் போராட்டம்
வீட்டுமனை பட்டா கோரி மனு அளிக்கும் போராட்டம்
ADDED : மே 14, 2025 01:47 AM
அரூர், அரூரில், வீட்டுமனை பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்கக்கோரி மா.கம்யூ., சார்பில், மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடந்தது. அரூர் தாலுகா அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர்கள் குமார், தங்கராசு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், மாநிலக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட செயலாளர் சிசுபாலன், மாவட்டக்குழு உறுப்பினர் மல்லையன் ஆகியோர் பேசினர்.
இதில், தமிழகத்தில் ஆட்சேபனையற்ற நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி, 10 ஆண்டுகளாக வசிப்போர் தகுதி பெறுவர். குறிப்பிட்ட சில வகை புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளாக வீடு கட்டி வசிப்போர் வரன்முறை அடிப்படையில் பட்டா
பெறலாம்.
இத்துடன் வழக்கொழிந்த நீர்நிலைகளாக ஆவணங்களில் மட்டும் நீர்ப்பிடிப்பு என்று இருக்கும் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கும், வீட்டுமனைப்பட்டாவும், புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டு காலம் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கும், வனத்தையொட்டிய புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்து வரும் நிலங்களுக்கும் வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.