/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/புகார் மனுக்கள் மீது உடனடி விசாரணை: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்புகார் மனுக்கள் மீது உடனடி விசாரணை: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
புகார் மனுக்கள் மீது உடனடி விசாரணை: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
புகார் மனுக்கள் மீது உடனடி விசாரணை: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
புகார் மனுக்கள் மீது உடனடி விசாரணை: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 20, 2024 06:18 AM
அரூர்: 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, அரூர் தாலுகாவில் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு செய்தார்.
மொரப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள, 'சிசிடிவி' கேமரா செயல்பாடுகள், வழக்குகள் குறித்த பதிவேடுகள், துப்பாக்கி லைசென்ஸ் பராமரிக்கப்படும் பதிவேடு, வருகை பதிவேடு, ஆண்கள் மற்றும் பெண்கள் கைதி அறைகளை ஆய்வு செய்ததுடன், நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து, இன்ஸ்பெக்டர் வான்மதியிடம் கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது, விசாரணை நடத்தி சட்டப்படி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து அரூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட கலெக்டர் சாந்தி நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள உணவு தயாரிக்கும் கூடத்தில் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின், பொன்னேரியில் ரேஷன் கடை, ஈட்டியம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வேப்பம்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதி, மல்லுாத்து கிராமத்தில் இருளர் இன மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 81 பேருக்கு வீட்டுமனைப்பட்டாவும், மகளிர் மேம்பாட்டு திட்டத்தில், 26 பேருக்கு, 1.62 கோடி ரூபாயை சுய உதவிக்குழு கடனாக வழங்கினார். ஆய்வின் போது, எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.