/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கள்ளக்காதலியை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற போலீஸ்காரருக்கு 'காப்பு' கள்ளக்காதலியை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற போலீஸ்காரருக்கு 'காப்பு'
கள்ளக்காதலியை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற போலீஸ்காரருக்கு 'காப்பு'
கள்ளக்காதலியை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற போலீஸ்காரருக்கு 'காப்பு'
கள்ளக்காதலியை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற போலீஸ்காரருக்கு 'காப்பு'
ADDED : செப் 23, 2025 06:25 AM
அதியமான்கோட்டை; கள்ளக்காதலியை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற போலீஸ்காரரை, போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை சேர்ந்த சக்திவேல் மனைவி கோமதி, 28. தம்பதிக்கு, 6 வயது மகள் உள்ளார். இரு ஆண்டுகளுக்கு முன் தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில், குழந்தையுடன் கோமதி பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
கணவர் மீது பாப்பாரப்பட்டி ஸ்டேஷனில் புகார் அளிக்க சென்றபோது, தனிப்பிரிவில் பணிபுரியும் ராஜாராம், 54, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. மனைவி, இரு குழந்தைகள் உள்ள ராஜாராம், கோமதியை குழந்தையுடன் தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டி காமராஜ் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்தார்.
இது குடும்பத்தினருக்கு தெரிந்ததால், கோமதியை சந்திப்பதை ராஜாராம் தவிர்த்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கோவிலில் பரிகார பூஜை செய்தால் பிரச்னை சரியாகிவிடும் எனக்கூறி, நேற்று முன்தினம் இரவு, இருவரும் அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றனர்.
பூஜை செய்ய அங்குள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வர கோமதி சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்று கிணற்றில் தள்ளி விட்டு, ராஜாராம் தப்பினார்.
கோமதி கிணற்றில் இருந்த ஒரு கல்லை பிடித்து இரவு முழுதும் உயிருக்கு போராடி உள்ளார். நேற்று காலை, 6:00 மணிக்கு கிணற்றிலிருந்து அவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் கோமதியை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அதியமான்கோட்டை போலீசார், ராஜாராமை நேற்று கைது செய்தனர்.