/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வக்கீல் மீது போலீசார் வழக்குப்பதிவு ஓசூரில் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்வக்கீல் மீது போலீசார் வழக்குப்பதிவு ஓசூரில் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
வக்கீல் மீது போலீசார் வழக்குப்பதிவு ஓசூரில் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
வக்கீல் மீது போலீசார் வழக்குப்பதிவு ஓசூரில் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
வக்கீல் மீது போலீசார் வழக்குப்பதிவு ஓசூரில் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 12, 2024 07:36 AM
ஓசூர் : ஓசூர் வக்கீல் மீது, சூளகிரி போலீசார் வழக்கு பதிந்ததை கண்டித்து, பா.ம.க.,வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் மனு, 33, லிங்கராஜ், 42; இவர்களிடம், 25 லட்சம் ரூபாய் கொடுத்தால், 30 லட்சம் தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கும்மனுாருக்கு வரவழைத்த மர்ம கும்பல், அவர்களை மிரட்டி, 25 லட்சம் ரூபாயை பறித்து சென்றது. இதில், பா.ம.க.,வை சேர்ந்த வக்கீலும், வக்கீல்கள் சமூக நீதி பேரவையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான கனல் கதிரவனை, 3வது குற்றவாளியாக, சூளகிரி போலீசார் வழக்கில் சேர்த்துள்ளனர். சம்பவம் நடந்த இடம் அவருக்கு சொந்தமானது என்பதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என, பா.ம.க., தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கனல் கதிரவன் மீது வழக்குப்பதிந்த போலீசாரை கண்டித்தும், வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வலியுறுத்தியும், ஓசூர் ஒன்றிய அலுவலகம் முன், பா.ம.க.,வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வக்கீல்கள் சமூக நீதி பேரவை தலைவர் பாலு தலைமை வகித்து பேசினார். மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., மேகநாதன், மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராம், கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர், மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் வெங்கடேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் அருண்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.