/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தீர்த்தமலையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தீர்த்தமலையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள்
தீர்த்தமலையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள்
தீர்த்தமலையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள்
தீர்த்தமலையில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள்
ADDED : ஜூன் 06, 2025 01:36 AM
அரூர், அரூர் அடுத்த தீர்த்த
மலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும், 2,000க்கும் மேற்பட்ட, பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீர்த்தமலை அடிவாரத்தில் இருந்து, மலைக்கோவிலுக்கு செல்லும் பாதையில், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே குவிந்துள்ளன. இதை
அப்பகுதியில் உள்ள மான் உள்ளிட்ட வன
விலங்குகள் உண்ணும் போது உயிரிழக்கும் நிலை உள்ளது. எனவே, தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதுடன், தீர்த்தமலை கோவிலுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல, நிரந்தர தடை விதிக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.