/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ குண்டும், குழியுமான சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை குண்டும், குழியுமான சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை
குண்டும், குழியுமான சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை
குண்டும், குழியுமான சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை
குண்டும், குழியுமான சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : மே 30, 2025 01:36 AM
அரூர் :அரூரில், சேலம் பைபாஸ் சாலையிலுள்ள, அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, எச்.தொட்டம்பட்டிக்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. இதன் வழியாக, பள்ளி, கல்லுாரி வாகனங்கள், விவசாய விளை பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள், டூவீலர்கள் என ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
கடந்த, 3 ஆண்டுகளுக்கு மேலாக, இச்சாலை மிகவும் சேதமாகி குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சிறு மழை பெய்தால் கூட, சாலையில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, சேதமடைந்துள்ள இச்சாலையை சீரமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.