ADDED : ஜூன் 10, 2025 01:29 AM
ஓசூர், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து துாத்துக்குடிக்கு, பி.வி.சி., பைப் தயார் செய்யும் மூலப்பொருட்களை ஏற்றிய லாரி நேற்று மதியம் சென்றது. ஓசூர் - ராயக்கோட்டை சாலையில், திரிவேணி கார்டன் லே அவுட் முன், வாகனங்களின் வேகத்தை குறைக்க, சாலையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று மதியம், 1:00 மணிக்கு, ராயக்கோட்டை சாலையில் அதிவேகமாக வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பேரிகார்டு மீது மோதி, சாலையோரம் தள்ளுவண்டியில் கிழங்கு சிப்ஸ் கடை மற்றும் கடைக்காரர் அழகேசன், 31, என்பவரின் பைக் மீது மோதி சாலையோரம் கவிழ்ந்தது. அழகேசன் தப்பியோடி உயிர் தப்பினார். லாரி டிரைவர் காயமடைந்தார். ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தி விசாரிக்கின்றனர்.