/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் 'தேசிய மருத்துவர் தினம்' ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் 'தேசிய மருத்துவர் தினம்'
ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் 'தேசிய மருத்துவர் தினம்'
ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் 'தேசிய மருத்துவர் தினம்'
ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் 'தேசிய மருத்துவர் தினம்'
ADDED : ஜூலை 03, 2025 01:15 AM
அரூர், -தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 'தேசிய மருத்துவர் தினம்' கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடியப்பன், தாளாளர் சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
விழாவில் கம்பைநல்லுார் அரசு மருத்துவர் கீர்த்தி கலந்து கொண்டார். இவரின் மருத்துவ சேவையை பாராட்டி பள்ளி நிர்வாக இயக்குனர் பவானி தமிழ்மணி, நினைவு பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மருத்துவர், குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றியும் உணவு முறைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
விழாவை முன்னிட்டு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, உடல் ஆரோக்கியம் பற்றி விழிப்புணர்வு நாடகம்,நடனம் போன்றவை நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் சாரதி மகாலிங்கம் பரிசுகளை வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி செய்திருந்தார்.