/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சிறுமிக்கு தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை சிறுமிக்கு தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : செப் 11, 2025 03:44 AM
தர்மபுரி:தர்மபுரி அருகே, சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் முதியவருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவைச் சேர்ந்தவர் பொன்னன், 67. இவர் தனக்கு பேத்தி முறையான, 14- வயது சிறுமியை, 2022 செப்., 21ல் பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர் புகாரில், பொன்னனை, பொம்மிடி போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்ற பொறுப்பு நீதிபதி மோனிகா விசாரித்து, பொன்னனுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.