/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அம்பேத்கர் சிலைக்கு தீ வைத்தவர் கைது அம்பேத்கர் சிலைக்கு தீ வைத்தவர் கைது
அம்பேத்கர் சிலைக்கு தீ வைத்தவர் கைது
அம்பேத்கர் சிலைக்கு தீ வைத்தவர் கைது
அம்பேத்கர் சிலைக்கு தீ வைத்தவர் கைது
ADDED : மே 21, 2025 02:54 AM

பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை அருகே, மார்பளவு அம்பேத்கர் சிலை, இரும்பு கிரில் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், பென்னாகரம் அண்ணா நகர் வடக்கு காலனியை சேர்ந்த நவீன்குமார், 25, அம்பேத்கர் சிலை மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதை பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, பென்னாகரம், வி.சி., கட்சி தொகுதி துணைச்செயலர் நாகராஜ் போலீசில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், நவீன்குமாரை கைது செய்து, மதுபோதையில் செய்தாரா அல்லது வேறு யாரும் அவரை துாண்டி விட்டனரா என, விசாரிக்கின்றனர்.