போலீஸ் ஸ்டேஷனில்காதல் ஜோடி தஞ்சம்
போலீஸ் ஸ்டேஷனில்காதல் ஜோடி தஞ்சம்
போலீஸ் ஸ்டேஷனில்காதல் ஜோடி தஞ்சம்
ADDED : செப் 09, 2025 02:35 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வாச்சாத்தியை சேர்ந்தவர் சின்னதுரை மகன் ராஜேந்திரன், 29, அதே பகுதியை சேர்ந்தவர் பழனி மகள் சாலா, 23, பட்டதாரி; இருவரும் கடந்த, 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இருவீட்டார் பெற்றோரும், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், ராஜேந்திரன், சாலா ஆகிய இருவரும், வீட்டை விட்டு வெளியேறி, கடந்த, 30ல் உறவினர்கள் உதவியுடன், ஆத்துார் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டு உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர்.
நேற்று பாதுகாப்பு கேட்டு, கோபிநாதம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பெண்ணின் தந்தை, காதல் திருமணத்தை ஏற்காமல் சென்று விட்டார். இதையடுத்து, சாலாவை காதல் கணவர் ராஜேந்திரனுடன், போலீசார் அனுப்பி வைத்தனர்.