Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அனுமதியின்றி களிமண் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி களிமண் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி களிமண் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி களிமண் கடத்திய லாரி பறிமுதல்

ADDED : செப் 07, 2025 01:05 AM


Google News
காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் உள்ள ஏரிகளில், மண் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, காரிமங்கலம் தாசில்தார் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் சென்றனர்.

அப்போது, அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிக்கொண்டு, தர்மபுரி--கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை பிடித்தனர். அதிகாரிகளை கண்டதும் டிப்பர் லாரி டிரைவர் தப்பினார். இதையடுத்து, 4 யூனிட் களிமண்ணை டிப்பர் லாரியுடன், பறிமுதல் செய்து, காரிமங்கலம் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us