/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ உள்ளாட்சி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் உள்ளாட்சி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
உள்ளாட்சி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
உள்ளாட்சி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
உள்ளாட்சி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : செப் 17, 2025 01:56 AM
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர், சிட்லிங் பகுதி உள்ளாட்சி பணியாளர்கள், டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டி, அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம், தர்மபுரி மாவட்ட உள்ளாட்சி பணியாளர், டேங்க் ஆப்பரேட்டர், துாய்மை பணியாளர், துாய்மை காவலர் மற்றும் பள்ளி துாய்மை பணியாளர் சம்மேளனம் சார்பில், நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். பொருளாளர் தமிழ்வாணன் வரவேற்றார். இ.கம்யூ., தர்மபுரி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், மாநில குழு உறுப்பினர் தேவராசன் ஆகியோர் பேசினர்.
போராட்டத்தில் சிட்லிங் பகுதி உள்ளாட்சி பணியாளர்களுக்கும், டேங்க் ஆப்பரேட்டர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும்.கொரோனா காலங்களில் பணி செய்த அனைத்து உள்ளாட்சி பணியாளர்களுக்கும், ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்கள், பள்ளிக் கல்வி துாய்மை பணியாளர்கள், ஊக்குனர்கள், டி.பி.சி., அனைவருக்கும் கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
உள்ளாட்சி பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியம் போல், பள்ளி துாய்மை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். உள்ளாட்சி பணியாளர் அனைவருக்கும் சுழற்சி முறை என்பதை கைவிட்டு, வாரம் ஒரு நாள் ஞாயிறு விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.