/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேர் திருவிழா லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேர் திருவிழா
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேர் திருவிழா
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேர் திருவிழா
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேர் திருவிழா
ADDED : ஜூன் 12, 2025 01:49 AM
பென்னாகரம், பென்னாகரம் அடுத்த அளேபுரத்தில் அமைந்துள்ளது, 1,000 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில். இக்கோவில் விழா, கடந்த, 4ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று, திருத்தேரோட்டம் நடந்தது.
அளேபுரம், பொச்சாரம்பட்டி, கே.அக்ரஹாரம், கே.குள்ளாத்திரம்பட்டி, மல்லாபுரம், மடம், நாச்சானுார், கூத்தப்பாடி, மடம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த, 5,000 மேற்பட்டோர் ஒன்றிணைந்து தேரை இழுத்து வழிப்பட்டனர். ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தினர். ஒகேனக்கல் இன்ஸ்பெக்கடர் முரளி தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.