ADDED : ஜூலை 12, 2024 12:51 AM
பொம்மிடி: பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை, சேலம் கோட்ட மேலாளர் ஆய்வு செய்தார்.
சேலம் ரயில்வே கோட்டத்திலுள்ள பொம்மிடி, மொரப்பூர், சாமல்பட்டி, திருப்பத்துார் உட்பட, 15 ரயில்வே ஸ்டேஷன்களில், 'அம்ரித் பாரத்' திட்டத்தில் ரயில்வே ஸ்டேஷன்கள் மேம்படுத்த, 272 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்து பணிகள் நடக்கிறது. நேற்று பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில், 11.54 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் பணிகளை, சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதேபோன்று மொரப்பூர், சாமல்பட்டி, திருப்பத்துார் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களிலும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது முதன்மை திட்ட மேலாளர் அணில் குமார் பன்ஜியார், உதவி கோட்ட பொறியாளர் அவினாஷ் மீனா, உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் இருந்தனர்.