ADDED : ஜூலை 10, 2024 06:47 AM
அரூர்: அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மதியம், 3:45 மணிக்கு அனைத்து கவுரவ விரிவுரையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் போராட்டம் நடந்தது.
அரூர் பகுதி தலைவர் தங்கபாண்டியன் தலைமை வகித்தார். போராட்டத்தில், அரசாணை, 56ன் படி கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, தமிழக அரசு விரைந்து நடைமுறை படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி, 2019 முதல் மாதம் ஒன்றுக்கு, 50,000 ரூபாய் ஊதியம் வழங்கி, அரியர் மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் விரிவுரையாளர்களுக்கு நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் கவுரவ விரிவுரையாளர்கள், 27 பேர் கலந்து கொண்டனர்.