/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கவுரவ விரிவுரையாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்கவுரவ விரிவுரையாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 12, 2024 12:54 AM
பாலக்கோடு: பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 73 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
நேற்று, 5வது நாளாக ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட பலகோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவுரவ விரிவுரையாளர்களுக்கு, கடந்த, 3 மாதங்களாக நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். அரசாணை, 56 ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, கடந்த, 2019ம் ஆண்டு முதல் மாதம், 50,000 ஊதியம் வழங்க வேண்டும். கற்பித்தல் பணி அனுபவத்துக்கு ஆண்டுக்கு தலா, 2 மதிப்பெண் வழங்கி, 15 ஆண்டுகளாக பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு எழுத்துத் தேர்வை ரத்து செய்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடாக, 4 சதவீதம் வழங்க வேண்டும். மகப்பேறு, மருத்துவ விடுப்பு, இறந்தவர்களுக்கு இழப்பீடு, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.