/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பாகலுார் சாலையை புதிதாக அமைக்க பூமி பூஜை; வாகன ஓட்டிகள் நிம்மதி பாகலுார் சாலையை புதிதாக அமைக்க பூமி பூஜை; வாகன ஓட்டிகள் நிம்மதி
பாகலுார் சாலையை புதிதாக அமைக்க பூமி பூஜை; வாகன ஓட்டிகள் நிம்மதி
பாகலுார் சாலையை புதிதாக அமைக்க பூமி பூஜை; வாகன ஓட்டிகள் நிம்மதி
பாகலுார் சாலையை புதிதாக அமைக்க பூமி பூஜை; வாகன ஓட்டிகள் நிம்மதி
ADDED : மே 17, 2025 01:49 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள பாகலுார் சாலையில் தினமும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இச்சாலை துவக்கத்தில் இருந்து, கே.சி.சி., நகர் வரை, 2 கி.மீ., துாரம் குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி வந்தனர். அவ்வப்போது விபத்துகளும் அரங்கேறி உயிர்பலியும் ஏற்பட்டது.
இந்நிலையில், 10.50 கோடி ரூபாய் மதிப்பில், 2 கி.மீ., துாரத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. இச்சாலையில், நான்கு இடங்களில் சாலையின் குறுக்கே கல்வெட்டுகள் அமைக்கப்படுகின்றன. இப்பணிகளை, ஓசூர் தி.மு.க., எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் பூமி பூஜை செய்து நேற்று துவக்கி வைத்தனர்.
நகரின் பிரதான சாலை என்பதால், மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வரும் திங்கட்கிழமை முதல் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.