/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஜி.ஹெச்., உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் துவக்கம் ஜி.ஹெச்., உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் துவக்கம்
ஜி.ஹெச்., உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் துவக்கம்
ஜி.ஹெச்., உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் துவக்கம்
ஜி.ஹெச்., உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 03, 2025 01:13 AM
பாப்பிரெட்டிப்பட்டி,
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சதீஷ், அங்கு பணியாற்றும் செவிலியரை ரிப்பன் வெட்ட செய்து தொடங்கி வைத்தார். பின் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்ற உணவு சுவையாகவும், தரமாகவும் இருக்க செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார். உள்நோயாளிகளுக்கு, காலை மற்றும் இரவில் பால் மற்றும் ரொட்டி மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மதிய உணவும் வழங்கப்பட உள்ளது. காலையில் இட்லி, சட்னி, சாம்பார், மதிய உணவாக சாதம், சாம்பார், கீரை, பொரியல், முட்டை, வாழைப்பழம், இரவில் கோதுமை ரவை மற்றும் கிச்சிடி என, 3 வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை அவர் துவக்கி வைத்தார்.
இதற்காக சமையலறை புதுப்பிக்கப்பட்டு உபகரணங்கள் மற்றும் மளிகை சாமான்கள், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அரிசியை, உணவு வழங்கல் துறை அனுமதியுடன் வழங்கப்பட்டுள்ளது. தினமும், 90 உள்நோயாளிகள் இந்த உணவு வழங்கும் திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.முன்னதாக கடத்துார் அடுத்த மணியம்பாடியில், 7வது சுற்று கோமாரி தடுப்பூசி முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மருத்துவ இணை இயக்குனர் சாந்தி, அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அருண் உள்பட பலர்
பங்கேற்றனர்.