/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வெற்றி ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிள் தர்மபுரியில் இலவச கருத்தரங்கம் வெற்றி ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிள் தர்மபுரியில் இலவச கருத்தரங்கம்
வெற்றி ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிள் தர்மபுரியில் இலவச கருத்தரங்கம்
வெற்றி ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிள் தர்மபுரியில் இலவச கருத்தரங்கம்
வெற்றி ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிள் தர்மபுரியில் இலவச கருத்தரங்கம்
ADDED : அக் 06, 2025 04:04 AM
தர்மபுரி: 'வெற்றி ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிள்' சார்பில், இலவச கருத்த-ரங்கம், தர்மபுரி டவுன் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிள் நிர்வாக இயக்குனர் சண்முகம் தலைமை வகித்தார். சேலம் மற்றும் தர்மபுரி மண்டல இயக்-குனர் எட்டப்பன், கிருஷ்ணகிரி மண்டல இயக்குனர் சாதிக், வெற்றி நீட் கேட்வே தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.இதில், ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிளில் பயிற்சி பெற்று, தற்போது, பல்வேறு அரசு பதவிகளில் உள்ளவர்கள், கருத்தரங்கில் கலந்து கொண்டு, தேர்வில் தங்ளுடைய அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை எதிர்-கொள்வது குறித்து எடுத்து கூறினர். மேலும், பயிற்சிக்கு தயா-ராகும் மாணவர்களுக்கு, 'வெற்றி ஐ.ஏ.எஸ்., அகாடமி' மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் தேர்வு முறைகள் குறித்தும் தெளிவாக எடுத்து கூறினர்.
இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்க-ளுக்கும் பொது தமிழ் புத்தகம், ஆறு மாத நடப்பு நிகழ்வு புத்-தகம் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், கருத்தரங்கில் கலந்து கொண்டு, அகாடமியில் சேர்ந்தவர்களுக்கு, 50 சதவீத கட்-டண சலுகை வழங்கப்பட்டது. இதில், தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், பலர் கலந்து கொண்டனர்.


