/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மேம்பாலம் அமைக்கும் பணி;கலெக்டர் ஆய்வுமேம்பாலம் அமைக்கும் பணி;கலெக்டர் ஆய்வு
மேம்பாலம் அமைக்கும் பணி;கலெக்டர் ஆய்வு
மேம்பாலம் அமைக்கும் பணி;கலெக்டர் ஆய்வு
மேம்பாலம் அமைக்கும் பணி;கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 27, 2024 12:31 AM
தர்மபுரி: தர்மபுரி அடுத்த தொப்பூரில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை, மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று ஆய்வு செய்தார்.தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சாந்தி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதில், தொப்பூரில் நடக்கும் சாலை விபத்துகளை தவிர்த்தல், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, தொப்பூர் கட்டமேட்டிலிருந்து, ஆஞ்சநேயர் கோவில், இரட்டைப்பாலம் வழியாக அமைக்கப்பட உள்ள, உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை அவர் நேரில் ஆய்வு செய்தார். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய சென்னை மண்டல அதிகாரி வீரேந்திர சாம்பியாள், சேலம் திட்ட செயலாக்க அலகு திட்ட இயக்குனர் சீனிவாசலு, நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார், பி.டி.ஓ., லோகநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.