/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தந்தை, மகன் இருவரை தாக்கிய ஐந்து பேர் கைது தந்தை, மகன் இருவரை தாக்கிய ஐந்து பேர் கைது
தந்தை, மகன் இருவரை தாக்கிய ஐந்து பேர் கைது
தந்தை, மகன் இருவரை தாக்கிய ஐந்து பேர் கைது
தந்தை, மகன் இருவரை தாக்கிய ஐந்து பேர் கைது
ADDED : ஜூன் 28, 2025 03:56 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த பனந்தோப்பு பகுதியை சேர்ந்த வேலு, 55, டிராவல்ஸ் வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.
இவரது மகன் தமிழரசன், 30, தனது சொந்த வாகனத்-திலேயே டிரைவராக பணிபுரிகிறார். கடந்த வாரம், ஊத்தங்கரை நேரு நகரை சேர்ந்த சீனிவாசன், திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்-காக தமிழரசனுக்கு சொந்தமான இரண்டு டிராவல்ஸ் வாகனங்-களை முன்பதிவு செய்தார். நேற்று முன்தினம் காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில், திடீரென திருமணம் நின்று விட்ட-தாக கூறி, முன்பதிவு செய்யப்பட்டிருந்த தமிழரசனின் வாகனங்-களை வேண்டாம் என கூறியுள்ளார். பிறகு வேறொரு டிராவல்ஸ் வாகனத்தை ஏற்பாடு செய்து திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.இதையறிந்த தமிழரசன், ஏன் எனது வாகனங்களை வேண்டாம் என்று மறுக்கிறீர்கள், உங்களுக்காகத்தானே நான் வேறு நபர்களுக்-கான முன்பதிவுகளை தவிர்த்து காத்திருந்தேன் என்று கூறி, சீனிவாசனுடன் மொபைல்போனில் வாக்குவாதத்தில் ஈடு-பட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு நேரு நகரை சேர்ந்த சீனிவாசன், 35, அவரது உறவினர்கள் பூங்கா-வனம், 41, திருமால், 37, தங்கராஜ், 21 மற்றும் 16 வயது சிறுவன், பாவாடை (எ)தமிழரசன், 27,ஆகியோர் தமிழரசன் இருக்கும் இடத்தை அறிந்து, ஆறு பேர் கொண்ட கும்பல் டிராவல்ஸ் ஸ்டாண்டுக்கு சென்று, அங்கிருந்த தமிழரசன், அவ-ரது தந்தை வேலு, 55, ஆகிய இருவரையும் கட்டையால் தாக்-கினர். இதில் பலத்த காயமடைந்த இருவரும், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
ஊத்தங்கரை போலீசார் விசாரித்து சீனிவாசன், பூங்காவனம், திருமால், தங்கராஜ், 16 வயது சிறுவனை கைது செய்தனர். தலை-மறைவாக உள்ள பாவாடை (எ) தமிழரசனை தேடி வருகின்-றனர்.