/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சரிவர பராமரிக்காத பள்ளி வாகனங்களுக்கு அபராதம் விதிப்புசரிவர பராமரிக்காத பள்ளி வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு
சரிவர பராமரிக்காத பள்ளி வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு
சரிவர பராமரிக்காத பள்ளி வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு
சரிவர பராமரிக்காத பள்ளி வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு
ADDED : மே 11, 2025 01:07 AM
தர்மபுரி, சரிவர பராமரிப்பு பணி மேற்கொள்ளாத, தனியார் பள்ளி வாகனங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
ஒவ்வொரு கல்வியாண்டும் பள்ளி துவங்குவதற்கு முன், வருவாய்த்துறை, பள்ளிக் கல்வித்துறை, காவல்துறை மற்றும் போக்கு
வரத்து துறை ஆகிய துறை அலுவலர்களின் முன், அனைத்து பள்ளி வாகனங்களும் தகுதியான நிலையில் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.
இதையொட்டி, 2025-26ம் ஆண்டிற்கான தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி மற்றம் பாலக்கோடு பகுதியில், 104 தனியார் பள்ளிகளில் இயங்கக்
கூடிய, 751 வாகனங்களுக்கான
சிறப்பு ஆய்வு முகாம், நேற்று தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் நடந்தது. கலெக்டர் சதீஸ் ஆய்வு மேற்கொண்டு பள்ளி வாகனங்களில் சரிவர பராமரிக்காத, 2 வாகனங்களுக்கு, தலா, 1,000 ரூபாயும், ஓட்டுனர் உரிமம் இல்லாத மற்றும் அவசர கால வழிகளை சரிவர பராமரிக்காத பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு, 5,000 ரூபாயும், முதலுதவி பெட்டிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய, 10 பள்ளி வாகனங்களுக்கு தலா, 100 ரூபாய் அபராதம் விதித்தார்.
மேலும், குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி வாகனங்களில் அரசின் அனைத்து விதிமுறைகளும் முறையாக முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என, வட்டார போக்கு
வரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தினார். நேற்று நடந்த ஆய்வில், 72 பள்ளிகளின், 352 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், குறைபாடுகளுடைய, 11 வாகனங்களுக்கு தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது. மேலும், சிறு குறைபாடுடைய, 14 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவ்வாகனங்களின் குறைகளை நிவர்த்தி செய்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஆய்விற்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வின்போது எஸ்.பி., மகேஸ்வரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ், ஆர்.டி.ஓ., காயத்ரி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
* அரூர்-சேலம் சாலையில், நம்பிப்பட்டி அருகேயுள்ள
மைதானத்தில் தனியார் பள்ளி
வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இதில், அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி தலைமை வகித்தார். அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் முன்னிலையில் நடந்த ஆய்வில், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களின் மொத்த எண்ணிக்கை, 442, இதில், 323 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், சிறு குறைபாடுடைய, 43 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவ்வாகனங்களின் குறைகளை சரி செய்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஆய்விற்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால் வாகனம் சிறைபிடிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.