/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வீட்டின் மீது விழுந்த மரம் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி வீட்டின் மீது விழுந்த மரம் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி
வீட்டின் மீது விழுந்த மரம் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி
வீட்டின் மீது விழுந்த மரம் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி
வீட்டின் மீது விழுந்த மரம் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி
ADDED : செப் 10, 2025 01:33 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சி, 1வது வார்டு கோட்டை பகுதியில் நள்ளிரவில் புளிய மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டில் இருந்த ஒரு பெண், 2 குழந்தைகள் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., அங்கு சென்று பார்வையிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறினார். மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதாநவாப், நகர, தி.மு.க., பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி மற்றும் கட்சியினர்உடனிருந்தனர்.