Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கற்றாழையை கடத்த முயன்ற தந்தை, மகனுக்கு 'காப்பு'

கற்றாழையை கடத்த முயன்ற தந்தை, மகனுக்கு 'காப்பு'

கற்றாழையை கடத்த முயன்ற தந்தை, மகனுக்கு 'காப்பு'

கற்றாழையை கடத்த முயன்ற தந்தை, மகனுக்கு 'காப்பு'

ADDED : செப் 22, 2025 02:01 AM


Google News
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சமூக காடுகள் விரிவாக்கம், பொம்மிடி வனச்சரக கட்டுப்பாட்டிலுள்ள கடத்துார் அடுத்த மணியம்பாடி வருவாய் கரடு பகுதியில், கற்றாழை தோட்டம் உள்ளது. அங்கு கற்றாழை வெட்டி கடத்தப்படுவதாக வனச்சரக அலுவலர் ஆனந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வனவர் கணபதி உள்ளிட்ட அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கற்றாழைகளை நல்லம்பள்ளியை சேர்ந்த முருகன், 55, அவரது மகன் சிவலிங்கம், 33, ஆகியோர் திருட்டுத்தனமாக கரடு பகுதியில் வெட்டி வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். அப்போது வன அலுவலர்கள் அவர்களை பிடித்தனர். அவர்கள் மீது வழக்கு பதிந்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவுப்படி இருவருக்கும் மொத்தம், 30,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us