/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சொட்டு நீர் பாசன உபகரணங்களை ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை சொட்டு நீர் பாசன உபகரணங்களை ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை
சொட்டு நீர் பாசன உபகரணங்களை ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை
சொட்டு நீர் பாசன உபகரணங்களை ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை
சொட்டு நீர் பாசன உபகரணங்களை ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 07, 2025 01:06 AM
தர்மபுரி, :தர்மபுரி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம், தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., காயத்ரி தலைமை வகித்தார்.
இதில், விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாயிகள் பேசியதாவது:
காரிமங்கலம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை, தர்மபுரி நகர பஸ் ஸ்டாண்ட் மற்றும் காரிமங்கலம் ஒன்றியம் சின்ன மாட்லாம்பட்டி ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயிகளுக்கு கோடை உழவு மானியம் வழங்குவது குறித்து தெளிவான அறிவுரை வழங்க வேண்டும். மாவட்டத்தின் அனைத்து தாலுகாவிலும் சொட்டுநீர் பாசன உபகரணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
கே.ஆர்.பி., அணையின் வலதுபுற வாய்க்கால் மதகை சரிசெய்ய வேண்டும். நல்லம்பள்ளி ஒன்றியம், மிட்டாரெட்டிஅள்ளி முதல், கோம்பேரி ஏரி வரை உள்ள பாலங்களை சரிசெய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த ஆர்.டி.ஓ., காயத்ரி, 'கோரிக்கைகள் குறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
கூட்டத்தில், அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.