/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி
ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி
ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி
ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி
ADDED : ஜூன் 06, 2025 01:41 AM
பென்னாகரம், :பென்னாகரத்தை அருகே செங்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேசிய சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தலைமை ஆசிரியர் பழனி உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உறுதிமொழி ஏற்றனர். மாணவர்களிடையே மரக்கன்றுகள் நடுவதன் அவசியம், மின் சிக்கனம், தண்ணீர் சிக்கனம், நெகிழி பயன்பாட்டை தவிர்த்து மீண்டும் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு பெறுதல் உள்ளிட்டவைகள் பற்றி பேசப்பட்டது. ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வராத வகையில், தன்னுடைய செயல்பாட்டுகளை அமைத்துக் கொள்ள கேட்டு கொள்ளப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நெகிழிப்பைகளுக்கு மாற்றாக மீண்டும் 'மஞ்சப்பை'யை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கி, மாணவர்களுக்கு, 'மஞ்சப்பை' வழங்கப்பட்டது.
நிகழ்வில், பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, ராஜேஸ்வரி மற்றும் சத்துணவு பணியாளர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர் கலந்து கொண்டனர்.