/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 'பயிரை காக்கும்-விலங்கை கொல்லாது' மின்வேலி அமைத்து இன்ஜினியர் அசத்தல் 'பயிரை காக்கும்-விலங்கை கொல்லாது' மின்வேலி அமைத்து இன்ஜினியர் அசத்தல்
'பயிரை காக்கும்-விலங்கை கொல்லாது' மின்வேலி அமைத்து இன்ஜினியர் அசத்தல்
'பயிரை காக்கும்-விலங்கை கொல்லாது' மின்வேலி அமைத்து இன்ஜினியர் அசத்தல்
'பயிரை காக்கும்-விலங்கை கொல்லாது' மின்வேலி அமைத்து இன்ஜினியர் அசத்தல்
ADDED : ஜூன் 02, 2025 04:09 AM
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரக பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியே வரும் யானைகள், அருகே விளைநிலங்களில் நுழைந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறை சோலார் மின்வேலி அமைத்திருந்தாலும், மற்ற பகுதிகளில் இருந்து வரும் யானைகள் பயிர்களை அழித்து விடுகிறது. சில இடங்களில் யானைகளின் தாக்குதலில், மக்கள் உயிரிழந்தனர். அதேபோல் மின்கம்பி மற்றும் சட்ட விரோத மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழந்தன.
இந்நிலையில், யானைகள் விளைநிலங்களில் நுழைவதை தடுக்க, பாலக்கோடு அடுத்த ஈச்சம்பள்ளத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் அருண், தன்னுடைய, 5 ஏக்கர் நிலத்தை சுற்றிலும், 4 லட்சம் ரூபாய் செலவில், வனத்துறை, வருவாய் துறை அனுமதியோடு சோலார் மின்வேலி அமைத்துள்ளார். தொங்கியபடி இருக்கும் இந்த அலுமினிய கம்பிகள், காற்றில் அசையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் உடலில் கம்பிகள் மோதும்போது அதற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். இதனால் விலங்குகள் நிலைகுலைந்தும், பயந்தும் பின் வாங்கி செல்லும் என்கிறார். இந்த வேலி அமைத்த பிறகு, யானை உள்ளிட்ட விலங்குகள் தனது விவசாய நிலத்தில் நுழைவதில்லை என்கிறார்.