/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தவறவிட்ட நகையை ஒப்படைத்த டிரைவர் கண்டக்டருக்கு பாராட்டு தவறவிட்ட நகையை ஒப்படைத்த டிரைவர் கண்டக்டருக்கு பாராட்டு
தவறவிட்ட நகையை ஒப்படைத்த டிரைவர் கண்டக்டருக்கு பாராட்டு
தவறவிட்ட நகையை ஒப்படைத்த டிரைவர் கண்டக்டருக்கு பாராட்டு
தவறவிட்ட நகையை ஒப்படைத்த டிரைவர் கண்டக்டருக்கு பாராட்டு
ADDED : ஜூன் 14, 2025 06:57 AM
தர்மபுரி: அரசு பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட, நான்கரை பவுன் நகையை ஒப்படைத்த டிரைவர், கண்டக்டரை போக்குவரத்து கழக பொதுமேலாளர் பாராட்டினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தர்மபுரி மண்டலத்திற்-குட்பட்ட திருப்பத்துார்--ஓசூர் வழித்தடத்தில் இயக்கப்படும் புற-நகர் பஸ்சில் கடந்த, 12ம் தேதி மாலை, 6:00 மணிக்கு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர், அவருடைய தங்க நகையை தவ-றவிட்டு சென்றது தெரியவந்தது. டிரைவர் கவியரசு, கண்டக்டர் வேலு ஆகியோர் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் பொறுப்பாள-ரிடம் பர்சுடன் தங்க நகையை ஒப்படைத்தனர்.இது குறித்து விசாரித்ததில், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரை சேர்ந்த ஜெயலஷ்மி என்பவர் பஸ்சில் நகையை தவறவிட்டு சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, பர்சுடன், நான்-கரை பவுன் நகையை ஜெயலஷ்மியிடம் ஒப்படைக்கப்பட்டது. டிரைவர் கவியரசு, கண்டக்டர் வேலு ஆகியோரை தர்மபுரி மண்-டல பொது மேலாளர் செல்வம் பரிசு வழங்கி பாராட்டினார்.